Project Overview · Chennai Blue Vision 2030

குப்பையில் தொடங்கி,
கனவு நினைவாகும் வரை

நம்முடைய project முற்றிலும் வேறுபட்டது. எங்களுடைய டிரீட்மெண்ட்ட்டுக்கு பிறகு ஆறு மிகச் சிறப்பாக ஓடும் என்ற நோக்கில், தற்போது ஓடாமல் தேங்கும் கூவத்தை ஆண்டு முழுவதும் நீர் ஓட்டம் கொண்ட புதிய நதியாக மாற்றுவதற்கான பல கட்ட ஆராய்ச்சி மற்றும் செயல் திட்டமே Chennai Blue Vision 2030.

Section summary: Chennai Blue Vision Foundation is a Saudi-based independent charity, not a government agency. This page explains Chennai Blue Vision 2030, a Cooum River revival project. Goals: restore flow, cut pollution, improve public health, and support recreation, tourism, and local livelihoods.

Chennai Blue Vision Foundation is a Saudi-based independent charitable organisation. It is not a government agency. Its campaign, Chennai Blue Vision 2030, proposes restoring the Cooum River — from Kesavaram to Chepauk — through clean water, greener banks, and public access.

01 · The Crisis

இன்றைய நிலை — The Crisis

கடந்த 50 ஆண்டுகளாக கூவம் நதி வறண்டு, குப்பை மலையாகவும் சாக்கடை கால்வாயாகவும் மாறியுள்ளது. இதனால் பூமி மாசு, நிலத்தடி நீர் மாசு, காற்று மாசு, ஒவ்வொரு மழைக்கும் வெள்ள அபாயம், பல்லுயிர் அழிவு மற்றும் அரசுக்கு வருடா வருடம் நிவாரண செலவு ஏற்படுகிறது.

முக்கிய பிரச்சினை: கூவத்தை வெறுமனே தூர்வாரி சுத்தப்படுத்துவது மட்டும் போதாது. நதியில் போதுமான நீர் ஓட்டம் இல்லாத நிலையில், நீர் ஆங்காங்கே தேங்குவதால் துர்நாற்றம், கொசு, ஆகாயத் தாமரை மற்றும் பாசி போன்ற பிரச்சினைகள் தொடரும் என்பதே திட்டத்தின் அடிப்படை கருத்து.
ஆராய்ச்சி பின்னணி: நதியை ஓட வைக்க என்ன வழிமுறைகள் உண்டு என்பதை மையமாகக் கொண்டு சவூதி அரேபியாவில் மேற்கொள்ளப்பட்ட பல கட்ட ஆராய்ச்சிகளின், மூன்று வருட உழைப்பின் பலனாக Chennai Blue Vision 2030 உருவானதாக அறிமுகப்படுத்தப்படுகிறது.
02 · The Goal

நமது இலக்கு — The Goal

அடுத்த 2 ஆண்டுகளில் கூவத்தை உயிரோடு ஓடும் புதிய நதியாகவும், மக்கள் வந்து செல்லும் உலகத் தர வாழ்விடமாகவும் மாற்றுவது.

🌊 ஆண்டு முழுவதும் ஓடும் நதி

சுத்தப்படுத்துதலைத் தாண்டி, நதியின் நீர் ஓட்டத்தை மையமாகக் கொண்ட அணுகுமுறை.

🌿 உலகத் தர வாழ்விடம்

மக்கள் பயன்படுத்தும், பசுமை மற்றும் நீர்நிலையை மையமாகக் கொண்ட நதிக்கரை சூழலை உருவாக்குதல்.

03 · 3 IN 1 SOLUTION

3 கட்ட செயல் திட்டம் — 3 IN 1 SOLUTION

Phase 1 · CLEAN · 6 மாதம்

மாசை அகற்றுவோம்

  • கரையோர கழிவுகள் 100% அகற்றம்
  • கழிவுநீர் கலப்பு 90% குறைப்பு
  • தொழிற்சாலை கழிவுகளுக்கு கடும் கட்டுப்பாடு

குறிப்பு: இதை தற்போதைய அரசு சிறப்பாக செய்து வருகிறது.

Phase 2 · GREEN · 1 வருடம்

பசுமையை பெருக்குவோம்

  • நதிக்கரை பசுமை 3 மடங்கு அதிகரிப்பு
  • மழைநீர் உறிஞ்சுதல் உள்கட்டமைப்பு மேம்பாடு
  • பல்லுயிர் பெருக்கம் 2 மடங்கு
  • Public Movement: “என் கூவம்” இயக்கம் மூலம் மக்கள் + CSR பங்களிப்பு

குறிப்பு: இதையும் இப்போது அரசு செய்துகொண்டு இருக்கிறது. நாம் தொழில்நுட்ப ஆலோசனை வழங்குவோம். ஆனால் இவையெல்லாம் மட்டும் தீர்வு அல்ல. தீர்வு — நதியை ஓட வைப்பது.

Phase 3 · DEVELOP · 2 ஆண்டுகள்

புதிய நதியை உருவாக்குவோம்

இதுவே CHENNAI BLUE VISION 2030-ன் உலகத் தர சாதனை.

  • முதல் கட்டம் ஏன் 10 KM? மெரினா முதல் சேத்துப்பட்டு வரை — சென்னையின் அழகிய முகத்தை முதலில் மாற்றும் பகுதி.
  • சென்னை சென்ட்ரல் + ஜெனரல் ஹாஸ்பிடல் + High Court + தலைமைச் செயலகம் + எழும்பூர் + மெரினா + Broadway + Mount Road Ribbon Building + நுங்கம்பாக்கம் IT Companies ஆகிய பெருமைகளுக்கு நடுவில் இருக்கும் துர்நாற்றக் கோட்டை மாற்றுதல்.
  • சிறப்பு: ஒரே முதலீடு, நான்கு பலன் — ஆண்டு முழுவதும் நீர் ஓட்டம் + மழையால் ஏற்படும் வெள்ளத்தை 100% குறைக்கும் வழிமுறை + பராமரிப்பு செலவு குறைவு.
  • விளைவு: சுற்றுலா வாய்ப்பு 200% வளர்ச்சி.
04 · The Legacy

உலக அளவிலான தாக்கம் — The Legacy

இது பழைய திட்டங்களைப் போல வெறும் நதியை சுத்தப்படுத்தும் திட்டம் அல்ல. புதிய நதியையே உருவாக்கி ஓட விடும் திட்டம்.

🌍 உலக மாதிரி

இதன் வெற்றியை கண்டு வெளிநாடுகள் தமிழ்நாட்டில் வந்து technology கேட்டு கையேந்தும் நிலை வரும்; அவர்கள் தங்கள் நாட்டின் நீர்நிலை திட்டங்களையே இதன் மாதிரியாக மாற்றக்கூடும் என்ற நோக்கத்துடன் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

🏆 Chennai Global Brand

சிங்கப்பூர், கொரியா மாதிரி கூவமும் உலக மாதிரி திட்டமாகும். இதனால் சென்னையின் Brand Value Global-ல் 10 மடங்கு உயரும் என்பது திட்டத்தின் நீண்டகால இலக்கு.

05 · Zero Risk, Only Gain ⭐

முக்கிய தெளிவுரை — Zero Risk, Only Gain

சென்னை மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்ற அடிப்படையில் திட்டம் முன்வைக்கப்படுகிறது.

💧 குடிநீர்

சென்னை வாசிகள் இன்று கூவம் நதிநீரை பயன்படுத்தவில்லை; இனியும் பயன்படுத்தப் போவதில்லை. திட்டத்தின் விளக்கத்தில் Metro Water = செம்பரம்பாக்கம் + பூண்டி + Desalination என குறிப்பிடப்படுகிறது.

🌾 விவசாயம்

இது Urban City River என்பதால் விவசாயத்துக்கும் பயன்படப் போவதில்லை என திட்டம் குறிப்பிடுகிறது.

முடிவு: எனவே இந்த திட்டத்தால் மக்களுக்கு ரிஸ்க் 0% என்ற கருத்துடன், வெள்ளம் இல்லை + சொத்து மதிப்பு உயர்வு + ₹2000 கோடி வருமானம் ஆகியவை முக்கிய பலன்களாக முன்வைக்கப்படுகின்றன.
06 · The Commitment

முடிவுரை — The Commitment

இது செலவு அல்ல... இது முதலீடு.
One Time Service, Long Time Benefits

50 வருட கனவை மூன்றே வருடத்தில் நனவாக்குவோம்.
இன்று நாம் திட்டமிடுகிறோம், நாளை நம் பிள்ளைகள் நதிக்கரையில் நடப்பார்கள்.

“ஒரு நதியை ஓட வைப்போம். ஒரு நகரத்தின் எதிர்காலத்தை மீட்டெடுப்போம். ஒரு மாநிலத்தின் பெருமையை உலகுக்கு காட்டுவோம்”
Chennai Blue Vision Foundation

Chennai Blue Vision Foundation

Leadership

Mr. Badruddin Abdul Majeed — Chairman

Mrs. Anees Farzana — Vice President

Mr. Noor Mohammed — Founder & General Secretary