Pledge
ஒரு நதியை ஓட வைப்போம். ஒரு நகரத்தின் எதிர்காலத்தை மீட்டெடுப்போம். Chennai Blue Vision 2030 திட்டத்தின் முக்கிய உறுதிமொழிகள்.
Section summary: Pledges for Cooum revival include restoring year-round flow, ending stench and mosquitoes, using natural treatment methods, and supporting recreation such as water metro boats.
50 வருட கனவுக்கு நிஜம்
Chennai Blue Vision 2030 திட்டத்தின் மூலம் 50 வருடங்களாக தடுமாறிக்கொண்டிருந்த சென்னை கூவத்தை ஓட வைத்தார்களே என்ற வரலாற்று பெருமையை தமிழ்நாட்டின் புதிய அரசுக்கு நாங்கள் வாங்கித் தருவோம்.
துர்நாற்றத்திற்கு 100% விடுதலை
கூவத்தின் துர்நாற்றத்திலிருந்து 100% விடுதலை. Chetpet முதல் Marina வரை சுத்தமான காற்று மட்டுமே. மக்கள் மூக்கை மூடிக்கொண்டு செல்லும் நிலை மாறி, மூச்சை இழுத்து ரசிக்கும் நிலை வரும்.
ஆகாய தாமரை, பாசி முற்றிலும் ஒழிப்பு
ஆகாய தாமரை, செடி, கொடி, பாசிகள் முற்றிலும் ஒழிப்பு. தண்ணீர் தொடர்ந்து ஓடுவதால் மீண்டும் வளரவே வளராது. இதற்கு 100% உத்திரவாதம்.
கொசு உற்பத்திக்கு முற்றுப்புள்ளி
கூவத்தில் உருவாகும் கொசுக்கள் முற்றிலும் ஒழியும். தேங்காத நீரில் கொசு வராது. இனி வரவே வராது. சுற்றியுள்ள 10 லட்சம் மக்களுக்கு நோய் இல்லா ஆரோக்கிய வாழ்வு.
100% இயற்கை திட்டம்
Chennai Blue Vision 2030 திட்டத்தில் கூவத்தை சுத்தப்படுத்த எந்தவித செயற்கை மருந்துகளையும், ரசாயனங்களையும் உபயோகிக்க மாட்டோம். முழுக்க முழுக்க Natural Innovation Technology மட்டுமே. இது எங்கள் சவூதி அரேபியாவின் ஆராய்ச்சி குழுவின் கண்டுபிடிப்பு.
Water Metro Boats - உறுதி
Water Metro Boats உறுதியாக வரும். 15 நிமிடத்தில் Chetpet → Marina. சாலை போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வு, சுற்றுலாவுக்கு புதிய அடையாளம்.
நிலத்தடி நீர் பாதுகாப்பு
கூவத்தின் அசுத்த தண்ணீரால் நிலத்தடி நீர் மாசுபடாமல் இருக்க ஒரு புதிய “Bio-Innovation” தொழில்நுட்பம் கையாளப்படும்.
கரையோர மதிப்பு 400% உயர்வு
சுகாதாரமான கரையோரங்களை உருவாக்கி அந்த நிலங்களின் மதிப்பை 400% உயர்த்துவோம். மேலை நாடுகளின் நதிக்கரையோரங்களைப் போல சென்னையில் புதிய கூவம் நதிக்கரையில் Business Corridor உருவாகும். 50 வருடமாக கூவத்தில் இழந்த பணம் மீட்டெடுக்கப்படும்.
வெள்ள நிவாரணம் - உடனடி வடிகால்
மழைக்காலங்களில் வெள்ள நீர் தேங்காமல் உடனடியாக கடலுக்கு போக ஒரு புதிய Innovation திட்ட அமைப்பு. அதனால் ஆண்டு தோறும் ஏற்படும் வெள்ள பாதிப்பிலிருந்து சென்னைக்கு விடுதலை.
உலகிலேயே முதல் முறை & அரசுக்கு வருமானம்
இதுபோன்ற தொழில்நுட்ப திட்டம் உலக நாடுகளில் இதுவே முதல் முறை என்ற பெருமை தமிழகத்திற்கு கிடைக்கும். இந்த திட்டத்தின் செயல்பாட்டின் வழியே அரசுக்கு வருடம் ₹2000 கோடி வருமானமும், வருடா வருடம் அரசு இழக்கும் பல நூறு கோடி வெள்ள நிவாரண செலவும் மிச்சமாகும்.
இப்படிக்கு,
Chennai Blue Vision Foundation
Dammam, Saudi Arabia
Chennai Blue Vision Foundation